Tuesday 22 November 2011

“ நோயற்ற நல்வாழ்வுக்கு உண்ணாவிரதம் உன்னத மருந்து ‘’


“ நோயற்ற நல்வாழ்வுக்கு உண்ணாவிரதம் உன்னத மருந்து ‘’
மனிதர்களைச் சுற்றிலும் வெற்றிடம் உள்ளது; அதுபோல மானிட உடலுக்குள்ளும் வெற்றிடம் தேவை என்று சித்தர்கள் உண்ணாவிரதம் மூலமாக வாழ்ந்து காட்டியுள்ளனர். உண்ணாவிரதம் பஞ்ச பூதங்களில் ஆகாயம் என்னும் இந்த மகத்தான பூதத்தை எவ்வளவு அதிகமாக நாம் பயன் படுத்துகிறோமோ அவ்வளவுக்கு நாம் நல்வாழ்வு பெறுவோம். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் நமக்கு எல்லையற்றதும் நமக்கு அருகிலேயாயினும். வெகுதொலைவிலேயானும், உள்ளதான ஆகாயத்துக்கும் நடுவே எவ்விதமான தடுப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே. வீடுகள், கூரைகள், உடைகள் என்பனவற்றின் குறுக்கீடு இல்லாமல் நம் உடம்பு ஆகாயத்தோடு தொடர்பு கொண்டதாக இருந்தால் அதிகபட்ச நல்வாழ்வு கிடைக்கும்.
உண்ணா விரதம் நடைமுறையில் 24 மணி நேரத்தில் ஒரு வேளை, இரு வேளை அல்லது மூன்று வேளை உண்ணாமல் இருப்பதாகும். ஒரு சில இடங்களில் காலை 6 மணிக்கு விரதம் துவங்கி மாலை 6 மணிவரை விரதம் முடிப்பது வழக்கம். இதைக் கடைப்பிடிப்பவர்கள் கூட ஒரு வேளை அல்லது இரு வேளை உண்பதில்லை.
பல்வேறு மதங்களிலும் ஒவ்வொரு வருடமும், வருடத்திற்கு ஒரு முறை அதாவது ஒரு மண்டலம் உண்ணாவிரதம் வழக்கத்தில் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
உண்ணாவிரதத்தில் வறட்சி விரதம், நீர் விரதம், பழரச விரதம் என்று மூன்று வகையினை இயற்கை மருத்துவர்கள் நடைமுறைப் படுத்துகின்றார்கள். 24 மணி நேரமும் நீர் கூட அருந்தாமல் இருப்பது வறட்சி விரதம், 24 மணி நேரத்திற்குள் இடை இடையே நீர் அருந்தினால் அது நீர் விரதம், வயது முதிர்ந்தவர்களும், நோயுற்றவர்களும் உடல் உறுதிக்காகப் பழரசங்களை அருந்திக் கடைப்பிடிப்பது பழரச விரதம்.
உண்ணாவிரதம் கடைப்பிடிக்கும் முறை:
விரத காலங்களில் நாம் உப்பு, புளி, காரச் சுவைகளைக் குறைக்க வேண்டும், அதிக பட்ச உணவு வகைகளை நிறுத்த வேண்டும், எளிதில் செரிக்கும் சிற்றுண்டி வகைகளையும், திரவ உணவுகளையும் பயன் படுத்தலாம். விரத காலங்களில் கடினமான உடல் உழைப்பு கூடாது, அதனால் விரைவாகச் சக்தி இழப்பு ஏற்பட்டு சோர்வு அல்லது மயக்கம் வரக் கூடும். அவசியம் ஏற்படின் கடின உழைப்பு முடிந்தவுடன் கண்டிப்பாகப் படுக்கை நிலையில் ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.
அதாவது சாந்தி ஆசனம் என்று அழைக்கப்படும் யோக நிலையில் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் சக்தி இழப்பு சமன் செயல்படுகிறது. மருத்துவ சக்தி அதிகரிக்கின்றது. விரத காலங்களில் பயணம் மேற்கொண்டால் பயணம் முடிந்தவுடன் ஓய்வு தேவை.
உண்ணாவிரதத்தின் போது
உண்ணாவிரதத்தின் போது உடல் நிலையில் ஏற்படும் சில மாற்றங்களைத் தெரிந்து கொண்டு நீட்டிக்கவோ அல்லது நிறுத்தவோ செயல்படலாம்.

  • நாக்கு: நாவின் மீது படிவு உண்டாகும், வழவழப்பாகவும், பிசுபிசுப்பாகவும், இருக்கும்,
  • மூச்சு: மூச்சில் ஒரு வித வாசனை இருக்கும், தீ நாற்றம் வெளிப்படும்.
  • உடல் வெப்பம்:  வெப்பநிலை குறைந்து பின் சாதாரண நிலை அடையும்.
  • நாடித்துடிப்பு: நாடித்துடிப்பு அதிகமாகி, பின் இயல்பாகிவிடும்.
  • இரத்தம்: இரத்தம் தூய்மையடைகிறது, அடர்த்தி குறைந்த திரவமாக இது மாறுகிறது. பாய்திறன் அதிகமாகிறது.
  • நுரையீரல்: நுரையீரலைச் சுற்றியிருந்த நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன. குரல் வளை சீர் படுகிறது.
  • இதயம்: இதயத்தின் சுவர்கள் வலிமையடைகின்றன. இதன் திறமை அதிகமாகிறது.
  • கல்லீரல்: கல்லீரலின் பணி சம நிலை அடைகிறது. பித்த நீர்ச் சுரப்பு ஒழுங்குபடுகிறது.
  • இரைப்பை: இரைப்பை முழு ஓய்வடைகிறது. அழுகல், நொதித்தல், ஆகிய பொருள்கள் வெளியேற்றப் படுகின்றன.
  • சிறுநீரகம்: சிறுநீரகங்கள் செம்மையடைகின்றன.
  • குடல்: குடல் ஓய்வடைகிறது, குடல் சுவர்கள் புதுப்பிக்கப் படுகின்றன, குடல் நோய்கள் முற்றிலும் குணமாகின்றன.
ஒரு சிலருக்குக் கீழ் வரும் அறிகுறிகள் இருந்தால் பயப்பட வேண்டாம். ஒரு சில மாற்றங்கள் மூலம் உண்ணா விரதத்தின் முழு பயனை அடையாளம்.
  • மயக்கம்:  மூளைக்கு இரத்தம் செல்லும்படிச் செய்ய வேண்டும். தலை தாழ்ந்த மட்டத்தில் இருக்க வேண்டும்.
  • பிடிப்பு:  விலா எலும்புகளிலும், குடலிலும் பிடிப்பு ஏற்படலாம். அப்போது எனிமா எடுத்துக் கொள்ளாலம்.  வெப்ப ஒத்தடம் கொடுக்கலாம், வயிற்றைக் கையால் நீவிவிடாலம்.
  • எடை:  தொடக்கத்தில் உடல் வற்றுவதும், குறைவதும் இயல்பே.
  • நாடித் துடிப்பு:  நாடி தாழ்ந்து துடிக்கு மென்றால் மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம் செய்ய வேண்டும்.
  • தலைவலி:  நிறைய நீர் குடிக்கலாம்; குளிக்காலம்; தலையின் முன் புறத்தை நீவி விடலாம்; நல்ல உறக்கம் அவசியம்.

0 comments:

Post a Comment